< Back
மாநில செய்திகள்
சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் சாவு
சிவகங்கை
மாநில செய்திகள்

சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் சாவு

தினத்தந்தி
|
30 Sept 2022 12:15 AM IST

மினிவேன் மோதிய விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போலீஸ்காரர் உயிரிழந்தார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் அன்புசிவராமன் (வயது 25). இவர் மதுரை 6-வது பட்டாலியனில் போலீசாக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ராமேசுவரம் கோவிலில் பாதுகாப்பு பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது மைத்துனர் மருதுபாண்டியுடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். கீரனூர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மருதுபாண்டி பரிதாபமாக இறந்தார்.

அன்புசிவராமன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அன்புசிவராமனும் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பூவந்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்