< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவருக்கு போலீசார் எச்சரிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவருக்கு போலீசார் எச்சரிக்கை

தினத்தந்தி
|
2 July 2022 7:53 PM IST

நெல்லிக்குப்பம் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவரை போலீசார் எச்சரிக்கை செய்தனா்.

நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த வளர்மதி (வயது 30) என்பவர் தனது கணவர் குடித்து விட்டு வந்து தினந்தோறும் தகராறு செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். இதை ஏற்ற போலீசார், இது பற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு சம்பவ இடத்திற்கு சென்று, அங்கிருந்த வளர்மதி கணவரை எச்சரிக்கை செய்து, மீறி இது போன்று நடந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டார்.

அதேபோல் சிறுபாக்கம் ஓரங்கூர் பகுதியை சேர்ந்த கலியம்மா (84) என்பவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்து, தன்னுடைய மகள் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் சிறுபாக்கம் ஏட்டு புகழேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பெண்ணின் மகளுக்கு தக்க அறிவுரை வழங்கி, மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

மேலும் செய்திகள்