நாகப்பட்டினம்
காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்
|காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் அறிவுறுத்தி உள்ளார்.
காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் அறிவுறுத்தி உள்ளார்.
காவல்துறை வாகனங்கள் ஆய்வு
நாகை மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஹர்ஷ்சிங் பதவி ஏற்றதில் இருந்து மாதந்தோறும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது காவல்துறையை சேர்ந்த வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார்.
அறிவுறுத்தல்
மேலும் குறைபாடுள்ள வாகனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.
ஆய்வின்போது காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை போலீசார் முறையாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.