< Back
மாநில செய்திகள்
போலீசார் வாகன சோதனை
தென்காசி
மாநில செய்திகள்

போலீசார் வாகன சோதனை

தினத்தந்தி
|
26 Sept 2022 12:15 AM IST

புளியரை சோதனைச்சாவடியில் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

செங்கோட்டை:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தமிழக-கேரள எல்லையான புளியரை போலீஸ் சோதனைச்சாவடியில் புளியரை போலீசாருடன் இணைந்து நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பினர்.

மேலும் செய்திகள்