நீலகிரி
போலீசார் வாகன சோதனை
|குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நீலகிரிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகளை போலீசார் வெளியிட்டனர். இந்தநிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், குன்னூர் போக்குவரத்து போலீசார் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக சுற்றுலா வாகனங்களை நிறுத்தி 2-வது கியரில் செல்ல வேண்டும். பிரேக் டிரம் சூடாகி இருந்தால் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்து விட்டு செல்லுமாறு சுற்றுலா வாகன டிரைவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என கருவி மூலம் சோதனை நடத்தினர். இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை மலைப்பாதையில் கவனமாக இயக்குமாறு அறிவுரை கூறினர்.