< Back
மாநில செய்திகள்
பழக்கடைக்குள் புகுந்த போலீஸ் வேன்
நாமக்கல்
மாநில செய்திகள்

பழக்கடைக்குள் புகுந்த போலீஸ் வேன்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

கொல்லிமலை அடிவாரத்தில் பழக்கடைக்குள் போலீஸ் வேன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேந்தமங்கலம்

சென்னை ஆவடி பகுதியில் இருந்து 3 வேன்களில் போலீசார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அந்த மலையில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு நேற்று காலை அடிவாரத்தில் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனங்களில் ஒன்று தனது கட்டுப்பாட்டு இழந்து திடீரென்று அங்குள்ள மாந்தோப்பு அருகில் இருந்த பழக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த சுவரில் மோதி நின்றது. அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் முன்னதாக அந்த போலீசார் வாகனம் அடிவாரப்பகுதியில் வந்தபோது அங்கு சாலையோரம் இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது மோதியது. அதில் அந்த கம்பம் பழுதானது குறிப்பிடத்தக்கது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பழக்கடைகள் புகுந்த போலீஸ் வாகனத்தை மீட்டனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்