< Back
மாநில செய்திகள்
போலீசார் அணி வகுப்பு ஊர்வலம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

போலீசார் அணி வகுப்பு ஊர்வலம்

தினத்தந்தி
|
17 Sept 2023 1:46 AM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணம், மதுக்கூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணம், மதுக்கூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

கும்பகோணம்

கும்பகோணம் வட்டாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தி, மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று விநாயகர் சிலைகளை துலாக்கட்ட பகுதியில் காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடத்துவதற்காக கும்பகோணம் போலீசார் நேற்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் மகாமகம் குளத்தில் இருந்து புறப்பட்டு டவுன் ஹைஸ்கூல் சாலை வழியாக பாலக்கரை பகுதியில் வந்தடைந்தது. இந்த அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

மதுக்கூர்

மதுக்கூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு சிலைகள் மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அவையாண்டி குளக்கரையில் கரைக்கப்படுகிறது.

அப்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக மதுக்கூர் போலீசார் சிவக்கொல்லை பகுதியில் இருந்து பெரமையா கோவில் வரை அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்விராஜ் சவுகான் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 70 போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்