< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல்லில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு
|16 Jun 2023 9:25 PM IST
குமாரபாளையம் பகுதியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்,
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் இயங்கும் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்த நபர்களிடம் இருந்து 50 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குமாரபாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.