< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

தினத்தந்தி
|
24 Oct 2022 1:46 AM IST

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சிலிண்டர் வெடிப்பு

கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கோவில் முன்பு சென்று கொண்டிருந்த ஒரு காரில் சிலிண்டர் வெடித்து காரில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில போலீஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி மற்றும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

கண்காணிப்பு தீவிரம்

இதையடுத்து மாவட்டத்தில் நகர் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக பகுதிகளிலும், போலீசார் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பஸ் நிலையங்களிலும், போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்