< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு; 5,144 பேர் எழுதுகின்றனர்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு; 5,144 பேர் எழுதுகின்றனர்

தினத்தந்தி
|
25 Aug 2023 6:45 PM GMT

தூத்துக்குடியில் இன்று (26-ந் தேதி) நடைபெறும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 5,144 பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்கான எழுத்து தேர்வு இன்று (26-ந் தேதி) நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 144 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் பி.எம்.சி. மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசியார்புரம் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மேற்பார்வையில் 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 460 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், போலீசார் மற்றும் போலீஸ் அமைச்சுப் பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ் (தூத்துக்குடி நகரம்), சுரேஷ் (தூத்துக்குடி ஊரகம்), வசந்தராஜ் (திருச்செந்தூர்), லோகேசுவரன் (மணியாச்சி), சிவசுப்பு (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), ஜெயராஜ் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), சம்பத் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு), புருசோத்தமன் (ஆயுதப்படை), லில்லி கிரேஸ் (சென்னை பொருளாதார குற்றப்பிரிவு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்