< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு; 6 ஆயிரத்து 105 பேர் எழுதினர்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு; 6 ஆயிரத்து 105 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
25 Jun 2022 9:04 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 6 ஆயிரத்து 105 பேர் எழுதினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 6 ஆயிரத்து 105 பேர் எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 7 ஆயிரத்து 246 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் திண்டுக்கல்லில் மட்டும் 1,453 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் தேர்வுக்காக திண்டுக்கல் புனித வளனார் பள்ளி, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரி, சக்தி கல்லூரி என மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5.10 மணி வரையும் என இரு பிரிவாக எழுத்து தேர்வு நடந்தது.

6,105 பேர் எழுதினர்

முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் உரிய சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வு நடந்தது. நேற்று நடந்த தேர்வில் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 105 பேர் தேர்வு எழுதினர். 1,141 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதேபோல் திண்டுக்கல்லில் 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்த 1,453 பேரில் 1,220 பேர் தேர்வு எழுதினர். 233 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மைய வளாகங்கள், தேர்வு அறை ஆகியவற்றில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்