< Back
மாநில செய்திகள்
2 தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

2 தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

தினத்தந்தி
|
24 Aug 2022 10:25 PM IST

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கு: 2 தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் சூசைநகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மனைவி ஆரோக்கியம்மாள். இவர்கள் சம்பத்தன்று வீ்ட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீ்ட்டின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்து அரோக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை பிடிப்பதற்காக கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, மியாட்மனோ ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்து யார் யார் செல்போன் மூலம் என்ன பேசினார்கள்? அவர்களின் முகவரி என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறோம். குற்றவாளி வெகு விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்