< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு
|28 Jun 2023 11:04 PM IST
பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இந்தநிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மசூதிகள், தொழுகைகள் நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்தநிலையில் வேலூர் கோட்டைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டைக்கு வரும் பொதுமக்களின் உடைமைகளை சோதனை செய்து உள்ளே அனுப்பினர். இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.