< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
நிலக்கோட்டையில் போஸ்டர் ஒட்டியவருக்கு வலைவீச்சு
|11 March 2023 3:00 AM IST
நிலக்கோட்டையில் பரபரப்பு போஸ்டர் ஒட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் ஒரே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், "அனைத்து ஊர்களிலும் தங்கள் கட்சியை சார்ந்தவர்கள் மூலம் சூரியன் விடிவதற்கு முன்பு மது பிரியர்களுக்கு விடிவு காலத்தை தந்த திராவிட முன்னேற்ற கழகமே" என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், பூசாரிபட்டி அம்சா நகர் நிலக்கோட்டை தாலுகா என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்த் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.