< Back
மாநில செய்திகள்
விவசாய நிலத்தில் கிடந்த காலி மதுபாட்டில்களை அகற்றிய போலீசார்
தென்காசி
மாநில செய்திகள்

விவசாய நிலத்தில் கிடந்த காலி மதுபாட்டில்களை அகற்றிய போலீசார்

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

தென்காசியில் விவசாய நிலத்தில் கிடந்த காலி மதுபாட்டில்களை இளைஞர்கள் மூலம் போலீசார் அகற்றினர்.

தென்காசி கீழப்புலியூர் பகுதியில் விவசாய நிலங்களில் மதுப்பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு காலி பாட்டில்களை ஆங்காங்கே வீசி சென்றுள்ளனர். இதனால் விவசாய நிலத்துக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அங்குள்ள இளைஞர்கள் மூலம் காலி மதுபாட்டில்களை அகற்றி, போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அங்கிருந்து சுமார் 300 மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் யாரும் மது அருந்த வேண்டாம், விவசாய நிலங்களில் இதுபோன்று காலி மதுபாட்டில்களை வீச வேண்டாம் என்று கூறி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்