நாகப்பட்டினம்
200 மதுபாட்டில்கள்-சாராயம் கடத்திய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
|நாகூரில் 200 மதுபாட்டில்கள்-சாராயம் கடத்திய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
நாகூர்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மோட்டார் சைக்கிளில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப்படை பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், தனிப்படை போலீசார் நாகையை அடுத்த நாகூர் அருகே உள்ள முட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் 2 பேரும் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே விட்டு, விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்று சோதனை செய்த போது, மோட்டார் சைக்கிள்களில் 200 மதுபாட்டில்கள் மற்றும் 200 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி நாகூர் போலீஸ் நிலையில் ஒப்படைத்தனர். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.