< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
பெண் சாராய வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு
|8 July 2022 10:25 PM IST
சங்கராபுரம் அருகே பெண் சாராய வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த செல்வி(வயது 38) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் லாரி டியூப்பில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் போலீசாரை கண்டதும் செல்வி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வியை வலைவீசி தேடி வருகிறார்கள்.