< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை - 700 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு
|4 Oct 2022 11:50 PM IST
வாணியம்பாடி அருகே 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் 700 லிட்டர் கள்ளசாராயம் அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக-ஆந்திரா எல்லை மலைப்பகுதியில், போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு, சாராய ஊறல்களை அழித்தனர். இந்த நிலையில் 3-வது நாளாக, மாதகடப்பா மலை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கள்ள சாராய ஊறல்கள் மற்றும் மற்றும் 200 லிட்டர் கள்ளசாராயம் ஆகியவற்றைக் கண்டறிந்து அழித்தனர். மேலும், கள்ளசாராயம் காய்ச்ச வைத்திருந்த மூலப்பொருட்களையும், சாராய அடுப்புகளையும் போலீசார் உடைத்தெறிந்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.