கன்னியாகுமரி
குமரியில் ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை
|குமரியில் ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
நாகர்கோவில்:
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழகத்தில் அரியலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் டயர்களை வைத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் அந்த ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு ரெயில்வே போலீசார் தண்டவாளங்களை தீவிரமாக கண்காணிக்கவும், சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தண்டவாளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தண்டவாளங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் குழித்துறை மேற்கு ரெயில் நிலையம் வரையிலும், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வரையிலும் ரெயில்வே போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
---