< Back
மாநில செய்திகள்
தலைமறைவான செயலாளருக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தலைமறைவான செயலாளருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
9 Aug 2022 10:08 PM IST

கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு, தலைமறைவான செயலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வேலை பார்த்த மணிவண்ணன் என்பவர் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை, வேறு தனியார் வங்கியில் அடகு வைத்து பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு பதிலாக முருகன் என்பவர் கூடுதல் பொறுப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரிடம் சங்கத்தின் ஆவணங்கள் மற்றும் நகைகளை முறைப்படி ஒப்படைக்காமல் மணிவண்ணன் தலைமறைவாகிவிட்டார். மேலும் கொடைக்கானல் கூட்டுறவு கள அலுவலர் செல்வராஜ் வெள்ளபொம்மன்பட்டி கடன் சங்கத்தில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் பழைய ஆவணங்களை ஒப்படைக்காததால், மேற்கொண்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தலைமறைவாக உள்ள மணிவண்ணனை கண்டுபிடித்து தருமாறு, கூட்டுறவு துணை பதிவாளர் பழனிசாமி மனோகரன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணிவண்ணனை, வடமதுரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்