< Back
மாநில செய்திகள்
கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
கரூர்
மாநில செய்திகள்

கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

தினத்தந்தி
|
6 Dec 2022 12:22 AM IST

கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதியையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் கரூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் நடைமேடையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. மேலும் ரெயில்வே போலீசார் கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பசுபதிபாளையம் அமராவதி பாலம் தண்டவாளத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்