< Back
மாநில செய்திகள்
கோவையில் போலீஸ்-பொதுமக்கள் இடையிலான கிரிக்கெட்; இறுதிப்போட்டிக்கு ஹர்பஜன் சிங் வருகை
மாநில செய்திகள்

கோவையில் போலீஸ்-பொதுமக்கள் இடையிலான கிரிக்கெட்; இறுதிப்போட்டிக்கு ஹர்பஜன் சிங் வருகை

தினத்தந்தி
|
15 Sept 2022 11:46 PM IST

கோவை மாநகர காவல்துறைக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை மாநகர காவல் துறை சார்பில் வருகிற 24-தேதி முதல் போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதில் காவல்துறை சார்பில் 10 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. போட்டிகள் வரும் 24 முதல் 30 தேதி வரை இந்த நடைபெற உள்ளன.

காவல்துறை அணியினருக்கு தனியாகவும், பொதுமக்கள் அணியினருக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெறும் என்றும் அக்டோபர் 2-ந்தேதி காவல்துறை மற்றும் பொதுமக்கள் அணியினர் இடையேயான இறுதிப்போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹர்பஜன் சிங், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்காக கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு வருகை தர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்