< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மெரினா கடற்கரையில் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் போலீசார்..!
|7 July 2022 11:12 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் குளிப்போர் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதனை தடுக்கும் பொருட்டு கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு மெரினா கடற்கரையை போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.