< Back
மாநில செய்திகள்
மதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
மாநில செய்திகள்

மதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

தினத்தந்தி
|
9 Nov 2023 7:33 PM IST

மதுரை அருகே குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை,

மதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த காளவாசல் பகுதியைச் சேர்ந்த குற்றவாளி ஸ்டீபன் ராஜாவை போலீசார் சுட்டுப் பிடித்தனர். செல்லூர் பகுதியில் இருந்த ஸ்டீபன் ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஸ்டீபன் ராஜா போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிஓட முயன்றுள்ளார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ஸ்டீபன் ராஜாவை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

இந்த நிலையில் காயமடைந்த காவலர் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஸ்டீபன் ராஜா இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்