< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
காவல்துறை, அமைச்சுப்பணியாளர்கள் பதக்கம் வென்று சாதனை
|9 March 2023 12:15 AM IST
மண்டல விளையாட்டு போட்டிகளில் காவல்துறை, அமைச்சுப்பணியாளர்கள் பதக்கம் வென்று சாதனை
விழுப்புரம்
திருச்சியில் கடந்த 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட 5 போலீசாரும் மற்றும் 5 அமைச்சுப்பணியாளர்களும் கலந்துகொண்டு முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதையடுத்து சாதனை படைத்த போலீசார், அமைச்சு பணியாளர்களுக்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.