< Back
மாநில செய்திகள்
பாலியல் சீண்டல்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
சென்னை
மாநில செய்திகள்

பாலியல் சீண்டல்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

தினத்தந்தி
|
10 Aug 2022 4:38 PM IST

பாலியல் சீண்டல்கள் குறித்து மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 148 பள்ளிக்கூடங்களில் நடைபெற்றது.

குழந்தைகள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது 'போக்சோ' என்ற கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் குறித்தும், பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள் குறித்தும் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எவை? என்பதை விளக்கினர். யாரேனும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால் துணிச்சலாக பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 148 பள்ளிக்கூடங்களில் நடைபெற்றது. 13 ஆயிரத்து 878 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மற்ற பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்