< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
|12 Jun 2023 11:41 PM IST
ஆற்காடு பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழிகாட்டுதலின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் (இணைய வழி குற்றப்பிரிவு) மேற்பார்வையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் ஆற்காடு பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிதி நிறுவன மோசடி, சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம், இளையதள முகவரி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.