< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு பலி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு பலி

தினத்தந்தி
|
4 Aug 2023 2:05 AM IST

மெலட்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீஸ் ஏட்டு மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.


மெலட்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீஸ் ஏட்டு மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

போலீஸ் ஏட்டு

திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 39). இவர், தஞ்சை மாவட்டம் மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்கலம் பகுதியில் இவர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதி பலி

அப்போது அந்த வழியாக தஞ்சையில் மதுவிலக்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராமநாதன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், போலீஸ் ஏட்டு பழனிவேல் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை

தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான போலீஸ் ஏட்டு பழனிவேலுக்கு சத்யா(32) என்ற மனைவியும், சாய்பிரசாத்(9), பத்ரிநாத்(7) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்