< Back
மாநில செய்திகள்
ஓசூரில்  கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற பெண்  போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற பெண் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
6 Jun 2022 11:02 PM IST

ஓசூரில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற பெண் போலீசார் விசாரணை

ஓசூர்:

ஓசூரில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 29). கட்டுமான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சந்தியா (27). இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5-ந் தேதி அதிகாலை அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தியா கணவர் என்றும் பாராமல் கார்த்திக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

வழக்குப்பதிவு

இதில் பலத்த தீக்காயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் சந்தியாவிற்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதுதொடர்பாக கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் சந்தியா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவரை, மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்