< Back
மாநில செய்திகள்
இறந்து கிடந்த வடமாநில வாலிபர் குறித்து போலீசார் விசாரணை
அரியலூர்
மாநில செய்திகள்

இறந்து கிடந்த வடமாநில வாலிபர் குறித்து போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
13 Oct 2023 11:52 PM IST

இறந்து கிடந்த வடமாநில வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமத்தில் உள்ள பெரிய ஓடையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ்குமார்(வயது 28) என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்