< Back
மாநில செய்திகள்
பட்டாசு விற்பனையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற போலீசார் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பட்டாசு விற்பனையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற போலீசார் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
14 Oct 2023 1:02 AM IST

பட்டாசு விற்பனையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

தீபாவளி பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். அருகிலோ, சாலையை ஆக்கிரமித்தோ பாதுகாப்பற்ற நிலையில் விற்பனை செய்யக்கூடாது, தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் சீன பட்டாசுகளை விற்க அனுமதி இல்லை. அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினார்கள். மேலும் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வருவதால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பட்டாசுகளை கையாள வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். கூட்டத்தில் துணை தாசில்தார் செல்வராஜ், கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்