< Back
மாநில செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டரின் தாயிடம் நகை பறிப்பு
மதுரை
மாநில செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டரின் தாயிடம் நகை பறிப்பு

தினத்தந்தி
|
4 July 2023 2:11 AM IST

சோழவந்தான் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரின் தாயிடம் நகை பறிக்கப்பட்டது.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மம்பட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய தாய் சின்னத்தாய் (வயது 65) இன்னொரு மகன் செந்தில் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சின்னத்தாய் வீட்டில் தனியாக இருந்தபோது 3 ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து அவரது வாயை பொத்தி காதில் அணிந்திருந்த தங்கதோடை பறித்து தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்