< Back
மாநில செய்திகள்
கோர்ட்டில் தவறான தகவல்களை கொடுத்த காவல் ஆய்வாளர் - நேரில் ஆஜராக உத்தரவு
மாநில செய்திகள்

கோர்ட்டில் தவறான தகவல்களை கொடுத்த காவல் ஆய்வாளர் - நேரில் ஆஜராக உத்தரவு

தினத்தந்தி
|
16 Jun 2022 1:00 PM IST

தவறான தகவல்களைக் கொடுத்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை

சென்னையைச் சேர்ந்த ரஜினிஸ்ரீ என்ற பெண், தனது கணவர் அருண்குமார் மீது வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இது குறித்து சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மேஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா ஆனந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரை திரும்ப பெறாத போது, புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக தவறான தகவலை கோர்ட்டில் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் ரஜினிஸ்ரீ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காவல்துறை இதுவரை தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பிரியதர்ஷினி, ஜுன் 17-ந்தேதி(நாளை) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்