கடலூர்
வெடி மருந்து குடோன்களில் போலீசார் ஆய்வு
|கடலூர் மாவட்ட வெடி மருந்து குடோன்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க கடலூர் மாவட்டத்தில் உள்ள வெடி மருந்து குடோன்கள், வெடி தயாரிக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் உட்கோட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் நல்லரெட்டிப்பாளையம், மேட்டுக்குப்பம், இருசாம்பாளையம், சிங்கிரிகுடி, ராமாபுரம், மதலப்பட்டு, தூக்கணாம்பாக்கம், எம்.புதூர் ஆகிய இடங்களில் உள்ள வெடி மருந்து குடோன்கள், வெடி தயாரிக்கும் ஆலைகளை நேரில் பார்வையிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவு வெடி மருந்து இருப்பு உள்ளதா, வெடிகள் இருப்பு உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
ஆய்வு
சிதம்பரம், விருத்தாசலம் உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுபதி, அங்கித்ஜெயின் ஆகியோர் ஆதிநாராயணபுரம், கூத்தங்கோவில், பெரியகுமட்டி, குப்பநத்தம், கொல்லத்தங்குறிச்சி ஆகிய இடங்களிலும், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் பெத்தாங்குப்பம், சேராக்குப்பம், குள்ளஞ்சாவடி, பார்வதிபுரம், ராசாக்குப்பம், எல்லப்பன் பேட்டை, தென்குத்து ஆகிய இடங்களிலும் வெடி மருந்து குடோன், வெடி தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
இதேபோல் சேத்தியாத்தோப்பு, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வெடி மருந்து குடோன்கள், வாண வெடி தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் போலீசார் ஆய்வு செய்தனர்.