< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மத்தூர் யூனியன் அலுவலக கழிப்பறையில் கேமரா பொருத்தி படம் பிடித்தவர் கைது
|16 Jun 2022 10:54 PM IST
மத்தூர் யூனியன் அலுவலக கழிப்பறையில் கேமரா பொருத்தி படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர்:
மத்தூர் யூனியன் அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராக சுதாகர் (வயது 34) என்பவர் பணிபுரிந்து வந்தார். தினக்கூலி பணியாளரான இவர், அங்குள்ள கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனை அறிந்த சுதாகரின் உறவினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழியிடம் கூறினர். இதுகுறித்து அருண்மொழி கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி சுதாகரை கைது செய்தனர்.