< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்
|28 Sept 2023 2:16 AM IST
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கினர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து செல்வோரை ஊக்கப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசார் இனிப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையிலான போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து சென்ற மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அவர்களுக்கு இனிப்பு வழங்கி இதேபோல் எப்போதும் நீங்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என அவர்களை உற்சாகப்படுத்தினர்.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அதேபோல் கார்களில் சீட் பெல்ட் அணிந்து முறையாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் இனிப்பு வழங்கினர்.