< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
|31 Aug 2022 3:17 AM IST
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் சார்பில் நேற்று மாலை கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். இதில் டவுன் தாலுகா இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மகளிர் போலீசார் உள்பட 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தி சிலை ரவுண்டானா, பி.எஸ்.கே. பார்க், காந்தி கலை மன்றம், சொக்கர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் வரை சென்றது.