< Back
மாநில செய்திகள்
போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தினத்தந்தி
|
15 Sept 2023 1:30 AM IST

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

வருகிற 18-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு திருப்பனந்தாள் அருகே சோழபுரம் போலீஸ்துறை சார்பில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய கடை வீதி வழியாக சென்று போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துெகாண்டு ஊர்வலமாக சென்றனர்.

அதேபோல் திருபுவனம் பகுதியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திருபுவனம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக திருபுவனம் கடைவீதி வழியாக கும்பகோணம் மயிலாடுதுறை மெயின் ரோட்டில் திருவிடைமருதூர் வரை அணிவகுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்