< Back
மாநில செய்திகள்
தொழிலாளி வெட்டிக்கொலை; சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தொழிலாளி வெட்டிக்கொலை; சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
15 Oct 2023 3:00 AM IST

நிலக்கோட்டையில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 54). இவர் நிலக்கோட்டையில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை குடோனில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி இரும்பு குடோனுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அழகரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிஓடி விட்டது.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல் வேடப்பட்டிைய சேர்ந்த சுள்ளான் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக், சிவகணேச சபரி, மாணிக்கம், சதீஷ், சர்புதீன் ஆகிய 5 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர்.

இதையடுத்து சரணடைந்த 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நிலக்கோட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நல்லகண்ணன், சரணடைந்த 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்பேரில் கார்த்திக் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து நிலக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்