புதுக்கோட்டை
போலீசார் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
|திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையம் சார்பில் திருட்டு தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினார். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் மற்றும் கடைவீதிகளில் வழங்கப்பட்டது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் வீட்டின் கதவுகளை பூட்டியே வைத்திருங்கள், வீட்டிற்கு மரக்கதவுகள் போடப்பட்டிருந்தாலும் கிரீல் கேட்டுகள் கூடுதலாக அமைக்க வேண்டும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்கள் தங்க நகைகளை அணிந்து கொண்டு தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் துண்டுபிரசுரத்தில் இடம் பெற்றிருந்தன.