< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு: வெடிக்காத நிலையில் இருந்த 3 ராக்கெட் லாஞ்சர்கள் - பாதுகாப்பாக வெடிக்க வைத்த போலீசார்
மாநில செய்திகள்

செங்கல்பட்டு: வெடிக்காத நிலையில் இருந்த 3 ராக்கெட் லாஞ்சர்கள் - பாதுகாப்பாக வெடிக்க வைத்த போலீசார்

தினத்தந்தி
|
27 Jan 2023 10:43 PM IST

வெடிக்காத நிலையில் இருந்த 3 ராக்கெட் லாஞ்சர்களை போலீசார் பாதுகாப்பாக வெடிக்க செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அருகே ராணுவ துப்பாகி சுடும் தளம் அருகே கடந்த அக்டோபர் மாதத்தில் 3 ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காத நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்த நிலையில், அவற்றை போலீசார் கைப்பற்றி பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள வனப்பகுதிக்குள் அந்த 3 ராக்கெட் லாஞ்சர்களையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். பின்னர் அவற்றை திட்டமிட்டபடி போலீசார் வெடிக்கச் செய்தனர்.


மேலும் செய்திகள்