கரூர்
புத்தாண்டை பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டிய போலீசார்
|புத்தாண்டை பொதுமக்களுடன் கேக் வெட்டி போலீசார் கொண்டாடினர்
கரூர் மனோகரா கார்னர் அருகே நேற்று நள்ளிரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கு புத்தாண்டு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சிைய வெளிப்படுத்தினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டையொட்டி கரூர், குளித்தலை உள்பட நகரின் பல்வேறு வீடுகளின் முன்பு பெண்கள், சிறுமிகள் வண்ண கோலமிட்டு விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றனர்.
போலீசார் ரோந்து பணி
கரூர் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏரளாமான போலீசார் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை வரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். இரவு 12 மணிக்கு மேல் சாலை மற்றும் முக்கிய வீதிகளில் கூடி நின்றவர்களையும், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களையும் போலீசார் எச்சரிக்கை செய்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர். மேலும் கரூரில் பகுதியில் நேற்று கடும் பனிப்பொழிவால் சாலைகளில் கூட்டம் மிகமிக குறைவாக காணப்பட்டது.
மது விற்பனை படுஜோர்
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெரும்பாலான பொதுமக்கள் மதியம் வீட்டில் அசைவ உணவை சமைத்து சாப்பிட்டனர். இதனால் கரூர் மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல் மது விற்பனையும் படுஜோராக நடந்தது.