< Back
மாநில செய்திகள்
காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
வேலூர்
மாநில செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

தினத்தந்தி
|
13 Aug 2022 10:25 PM IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காட்பாடி வழியாக செல்லும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெயில்களில் பயணிக்க வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் எடுத்துச் செல்லும் உடமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்கின்றனர்.

காட்பாடி ரெயில் நிலைய வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிக்க ப்படுகிறது.

மேலும் செய்திகள்