< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
|25 Sept 2022 12:15 AM IST
திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயி்லில் சோதனை செய்தனர். அப்போது மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.