< Back
மாநில செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்த சாமியார் மீது போலீசில் புகார்
சிவகங்கை
மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்த சாமியார் மீது போலீசில் புகார்

தினத்தந்தி
|
8 Sept 2023 12:53 AM IST

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்த சாமியார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிவகங்கை நகர் தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான துரை ஆனந்த் தலைமையில் நகர் இளைஞர் அணி செயலாளர் அயூப்கான், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், துபாய் காந்தி, ராமதாஸ், இலக்கிய அணி மாவட்டத் துணைத்தலைவர் ராஜபாண்டி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு சேர்ந்த சதீஷ் மற்றும் சரவணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதை சிலர் ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிரானது என்பதைப் போல ஒரு வாதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பரமாஹன்ஸ் ஆச்சாரியார் என்பவர் அமைச்சர் உதயாநிதியின் படத்தை வாளை வைத்து கிழித்து அதை தீயிட்டு கொளுத்தி அவரது தலைக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவித்து, மிரட்டல் விடுத்துள்ளார். பொதுமக்கள் மனதில் பகை உணர்வை தூண்டும் வகையிலும் பேசி கொலை மிரட்டல் விடுத்த பரமாஹன்ஸ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்