< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் போலீஸ்-பொதுமக்களுக்கிடையேயான நல்லுறவு விளையாட்டு போட்டிகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் போலீஸ்-பொதுமக்களுக்கிடையேயான நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

தினத்தந்தி
|
10 July 2023 3:03 PM IST

காஞ்சீபுரத்தில் போலீஸ்-பொதுமக்களுக்கிடையேயான நல்லுறவு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் போலீஸ்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், மேற்பார்வையில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், கபடி மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் போலீசார் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர்.

போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துவதற்காகவே இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிவனுபாண்டியன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்திய ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

மேலும் செய்திகள்