< Back
மாநில செய்திகள்
சென்னையில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

தினத்தந்தி
|
23 July 2023 11:51 AM IST

பல்வேறு வழக்குகளில் சிக்கிய 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை,

சென்னையில் வழிப்பறி வழக்கில் கைதான திருவல்லிக்கேணியை சேர்ந்த சலீம் (வயது 21), பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த அரிவாள் அருணாச்சலம் (24), சவுகார்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் (44), கஞ்சா வழக்கில் சிக்கிய நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (29), கொக்கைன் போதை பொருளுடன் பிடிபட்ட சூளைமேடு அவ்வை நகரை சேர்ந்த தாஜூதீன் (39), செல்போன் பறிப்பு வழக்கில் சிக்கிய சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவை சேர்ந்த தோட்டா பிரவீன் (23), சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த வழக்கில் கைதான சண்முகம் (26) ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் அளித்த பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கையை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்