< Back
மாநில செய்திகள்
ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றவாளிகள் 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றவாளிகள் 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

தினத்தந்தி
|
20 July 2022 6:35 AM GMT

ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றவாளிகள் 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மீஞ்சூர் போலீஸ் நிலைய கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அத்திப்பட்டு புதுநகர், தேனி மாவட்டம், எண்ணூர், எர்ணாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுந்தர் (வயது 43), பத்மநாபன் (25), அரவிந்த் குமார் (26), பாலாஜி (38), நாகராஜ் (29), ராஜேஷ் (23), யுவராஜ் (25), ராஜ்குமார் (27), சவுந்தரபாண்டியன் (46) உள்பட 10 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதன்படி இவர்கள் 10 பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை ஆவடி காவல் ஆணையரகத்தில் மொத்தம் 88 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்