சேலம்
சேலத்தில் இரவு நேர ரோந்து மோட்டார் சைக்கிள்களை போலீஸ் கமிஷனர் ஆய்வு
|சேலத்தில் இரவு நேர ரோந்து மோட்டார் சைக்கிள்களை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா ஆய்வு செய்தார்..
அன்னதானப்பட்டி,
சேலம் மாநகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், அவரவர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாநகர போலீசாருக்கு வழங்கப்பட்ட இரவு நேர ரோந்து மோட்டார் சைக்கிள்களை நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், மோட்டார் சைக்கிளின் தன்மை குறித்தும், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இரவு அல்லது பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபடும்போது போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.