< Back
மாநில செய்திகள்
போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினர் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது - 20 பவுன் தங்க நகை பறிமுதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினர் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது - 20 பவுன் தங்க நகை பறிமுதல்

தினத்தந்தி
|
27 Sept 2022 2:48 PM IST

திருவள்ளூர் அருகே தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் போலீசாரின் வாகன தணிக்கையின் போது சிக்கினர்.

திருவள்ளூர் அடுத்த மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் தொடுகாடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தபோது போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில், அவர்களிடம் 20 பவுன் தங்க நகை இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பேரம்பாக்கம், பண்ணூர், மணவாளநகர், புல்லரம்பாக்கம், காக்களூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருவள்ளூரை அடுத்த மேலகொண்டையார் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 36), காக்களூரை சேர்ந்த ராஜ்கமல் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 20 பவுன் தங்க நகையையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்